search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா வழக்கு"

    • விளம்பர அரசு பத்திரிக்கை சுதந்திரத்தை காலில் போட்டு மிதித்துள்ளது.
    • ஒட்டுமொத்த பத்திரிகை உலகத்தையும் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறது.

    தமிழக காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இவர் தனது காரில் கஞ்சா வைத்திருந்ததாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சவுக்கு சங்கர் கைதுக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான எக்ஸ் பதிவில் அவர், "சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர் அவர்களை திமுக தலைமையிலான அரசு கைது செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இதன் மூலம் திமுக தலைமையிலான விளம்பர அரசு பத்திரிக்கை சுதந்திரத்தை காலில் போட்டு மிதித்துள்ளது."

    "தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை, தமிழக காவல்துறை நேற்று கைது செய்து போலீஸ் வேன் மூலம் கோவைக்கு அழைத்துச் சென்ற போது அவர்கள் வந்த வேன் மீது கார் ஒன்று மோதியதில் சவுக்கு சங்கர் மற்றும் இரண்டு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வருகின்றன. இதன் மூலம் பத்திரிக்கை தொழிலில் உள்ளவர்கள், சமூக ஊடகங்களில் இருப்பவர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்."

    "பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் அவர்கள் திமுக தலைமையிலான அரசின் நிர்வாக சீர்கேடுகளையும், பல்வேறு துறைகளில் நடைபெறும் ஊழல்களையும், இந்த அரசாங்கத்தின் தவறுகளையும், அஞ்சாமல் தைரியத்துடனும், துணிச்சலாகவும் தனது கருத்துகளை பேட்டிகள் மூலம் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார்."

    "இத்தகைய சூழ்நிலையில் திமுக தலைமையிலான அரசு மீது வைக்கப்படும் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் பத்திரிகையாளர் சவுக்கு சங்கரை கைது செய்து இருப்பதன் மூலம் ஒட்டுமொத்த பத்திரிகை உலகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறது. திமுக தலைமையிலான அரசு இதுபோன்று பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி தங்கள் தவறுகளை மறைக்க பார்க்கிறது."

    "பத்திரிகையாளர்களின் விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் அனைவருக்கும் வேண்டும் என்ற கருத்தை, சமீபத்தில் ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம், தெரிவித்து இருப்பதையும் இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, திமுக தலைமையிலான அரசு இதுபோன்று பத்திரிக்கையாளர்களை அச்சுறுத்தி, பத்திரிக்கை சுதந்திரத்தை அடியோடு நசுக்கிவிடலாம் என்று தப்பு கணக்கு போடுவதை விட்டுவிட்டு, தங்கள் தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும்."

    "தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெயிலின் தாக்கத்தால் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு, தொடர் மின்தடை போன்றவற்றை சரிசெய்ய தேவையான அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

    • பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு.
    • பழனிசெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சவுக்கு சங்கர் தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ சஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை போலீசார் வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.

    சவுக்கு சங்கர் உடனிருந்த பிரபு, ராஜரத்தினம் ஆகியோரிடம் பழனிசெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மருத்துவ பரிசோதனைக்காக 3 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர்.
    • தப்பி ஓடிய சதீஸ்குமார் தனது நண்பருக்கு உடனடி தகவல் கொடுத்து காரில் ஏறி சென்றார்.

    திண்டுக்கல்:

    தேனியில் இருந்து திண்டுக்கல்லுக்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போதைப்பொருள் கடத்தல் நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று இரவு செம்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

    அப்போது தேனியில் இருந்து திண்டுக்கல் வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் 22 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் வந்த கம்பத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் (25), நவீன்குமார் (30), பாண்டீஸ்வரன் (28) ஆகிய 3 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக தயார்படுத்தினர்.

    மருத்துவ பரிசோதனைக்காக அவர்கள் 3 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர்.

    அப்போது அங்கிருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி சதீஸ்குமார் என்பவர் தப்பி ஓடினார். பாதுகாப்புக்காக நின்று கொண்டு இருந்த நுண்ணறிவு பிரிவு போலீஸ் நாகலிங்கம் (35) என்பவர் தடுக்க முயன்றபோது அவரையும் தாக்கி கீழே தள்ளி விட்டு ஓடினார்.

    இதில் நாகலிங்கம் படுகாயமடைந்தார். தப்பி ஓடிய சதீஸ்குமார் தனது நண்பருக்கு உடனடி தகவல் கொடுத்து காரில் ஏறி சென்றார். இதனைத் தொடர்ந்து அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

    பிடிபட்ட மற்ற 2 பேர்களான நவீன்குமார் மற்றும் பாண்டீஸ்வரன் ஆகிய இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • குண்டர் சட்டத்தில் கைது
    • மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தாலுகா, பில்லாந்தி, மேல்சீசமங்கலம், கிராமத்தை சேர்ந்த படப்பை விக்கி (எ) விக்னேஷ் (26) என்பவரை போலீசார் கடந்த மாதம் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் வளர்மதி, அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் படப்பை விக்கி (எ) விக்னேனை போலீசார் கைது செய்து சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • சதாம் உசேன் தச்சநல்லூர் பெருமாள்கோவில் தெருவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
    • கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டவர் திடீரென கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது 29). இவர் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக கூறி அவரை போலீசார் கைது செய்ய தேடிய நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார்.

    இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். அவர் நெல்லையை அடுத்த தச்சநல்லூரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படையினர் அங்கு நேற்று விரைந்தனர். அப்போது சதாம் உசேன் தச்சநல்லூர் பெருமாள்கோவில் தெருவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. உடனே அங்கு சென்று அவரை கைது செய்து ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றனர்.

    அப்போது சிறிது நேரத்தில் ஜீப்பில் இருந்த சதாம் உசேன் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கையை அறுத்துக்கொண்டார். இதில் அவரது கையில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தனிப்படையினர் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டவர் திடீரென கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×